Posts

ஊராளி கவுண்டர்கள் வேட்டை பிரியர்கள்.

Image
ஊராளி கவுண்டர்கள் வேட்டை பிரியர்கள். ஒவ்வொரு வருடமும் மஹா சிவராத்திரி அன்று முன்னோர்களுக்கு படையலிட்டு வணங்குவார்கள். மஹா சிவராத்திக்கு அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு வேட்டைக்கு செல்வார்கள். வேட்டைக்கு தலைமை காவேட்டைக்காரன். கா - என்றால் தலைவன் வேட்டைக்காரத்தலைவன் என்று பொருள். வேட்டையின் இறுதி நாள் அன்று: வேட்டையில் முயலை கொல்பவருக்கு அதன் தலை கொடுக்கப்படும்.பின்னர் வேட்டையாடப்பட்ட முயல்களின் கறியை வெட்டி குச்சியில் குத்தி ஊரில் உள்ளவர்களுக்கு வீட்டில் உள்ள ஆண்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குச்சிகள் கொடுக்கப்படும்.

தியாகி பழ.பொன்னம்பல கவுண்டர்

Image

ரவீந்திரன் துரைசாமி-அரசியல் விமர்சகர்

Image
ரவீந்திரன் துரைசாமி ரவீந்திரன் துரைசாமி நாடார்:- ~திருநெல்வேலி  மாவட்டம் ராதாபுரம் வட்டம்/சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்து கண்ணங்குளத்தை  சேர்ந்தவர்.         ~ விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்  இவருடைய தந்தை LIC அலுவலர் என்றும் ஆதன் தமிழில் கொடுத்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.         ~ சிறுவயதிலே குழு அரசியல் குறித்து அறிந்து கொண்டவர்.         ~ இவருடைய குடும்பம் பின்னர் நாகர்கோவிலில் குடியேருகின்றனர்         ~ நாகர்கோவிலில் பள்ளி படிப்பை முடித்தார் .         ~விருதுநகர் இந்து நாடார்களின் செந்திகுமார நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் [Virudhunagar Hindu Nadars' Senthikumara Nadar College (Autonomous)]] ஆங்கில இலக்கியத்தில் பட்ட படிப்பை முடித்தார் பின்னர் கேரளாவில் உள்ள கேரளா லா அகாடமி சட்ட கல்லூரியில் [Kerala Law Academy] சட்ட படிப்பை முடித்தார்.

Raveendran Duraisamy Political Analyst

Raveendran Duraisamy:-  Popular Political Analyst in Tamilnadu.He is called as  RajaGuru his followers.  ~ His political predictions are mostly correct. ~ He also speak about social engineering politics. ~ He belongs to Nadar community.

கவுண்டர் என்பது பட்டமே.

Image
கவுண்டர் என்பது பட்டமே. முனைவர் சி.சுப்பிரமணியன். " கொங்கு வேளாளர் , காப்பிலியன் , பள்ளி , செம்படவன் , ஊராளி , வேட்டுவன் , தமிழர் , கன்னடர் சிலருக்கு வழங்கப்படும் பட்டப் பெயா " 27 என்று தமிழ்ப்பேரகராதி பொருள் கூறுகிறது .  கவுண்டர் என்ற சொல் கொங்கு வேளாளர்களை மட்டும் குறிப்பது அல்ல . கவுண்டர் என்ற சொல் ஒரு பட்டப் பெயராகக் கிராமத் தலைவர்களுக்கே வழங்கப்பட்டதாகும் . கவுண்டர் என்ற சொல் காமிண்டர் என்ற சொல்லிலிருந்தே வந்திருக்க வேண்டும் . கா = காவல் தொழில் . மிண்டன் = வலிமையுடையவன் . உரைக்காக்கும் வலிமையடையவன் என்பது இதன் பொருளாகும் . வடமொழியில் ' கா ' என்றால் கிராமம் என்றும் மிண்டன் என்றால் வலிமை மிக்க தலைவன் என்றும் பொருள்படும் . வடமொழிப்படி பொருள் கொண்டாலும் கிராமத்தில் வலிமை மிக்க தலைவன் என்ற பொருளே பெறப்படும் .  காமிண்டன் என்ற சொல் கி.பி .13 ஆம் நூற்றாண்டிலிருந்து தான் கொங்குநாட்டில் பயின்று வருகிறது என்பதைத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் பதிவு அலுவலகம் , கோயமுத்தூரிலுள்ள பெருந்தலையூர் , சேவூர்க்கல்வெட்டுக்கள் வழி அறியமுடிகிறது .  " " இவர்களை அரசனுடை...

தியாகி.திரு.ப.பொன்னம்பலக் கவுண்டர்.

Image
ஊராளிக்கவுண்டர்களில் மூத்த தலைவர் சுதந்திர போராட்ட தியாகி திரு.பொன்னம்பலக் கவுண்டர் அவர்கள் 1905 ஆம் ஆண்டு கரூர் மாவட்டம் வடசேரி கிராமத்தில் பழனியாண்டி-முத்தம்மாள்  தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். மிகவும் பின் தங்கிய மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் தொழிற்கல்வியை பயிற்றுவிக்கும் பள்ளியை தவிர வேறெதுவும் இல்லை. பழனியாண்டி கவுண்டர் வேறு பள்ளியில் தன் மகனை சேர்க்க விருப்பமில்லாமல் தானே தனது சொந்த இடத்தில் , சொந்த செலவில் பள்ளியை தொடங்கி மகனுக்கு தொடக்க கல்வியை கொடுத்தார் .  பொன்னம்பலம் தொடக்க கல்வியை முடித்து கல்லூரி படிப்பை தொடங்கிய காலத்தில் வைத்தியநாதன் மற்றும் சேஷன் ஆகியோரின் நட்பை பெற்றதால் உலகம் மற்றும் இந்திய போராட்டச் செய்திகளை இவர்களின் வாயிலாக அறிந்துகொண்டார் .  இந்திய விடுதலைச் செய்திகளை நவசக்தி மற்றும் சுதந்திர சங்கு போன்ற இதழ்களை வாசித்து தேசபக்தியை வளர்த்துக்கொண்டார் . இச்சூழ்நிலையில் மேலவெளியூரில் பிறந்த ராஜம்மாள் வாழ்க்கை துணைவியானார். இவர்களுக்கு இரு ஆண்குழந்தைகள் பிறந்தனர் .  1923 -ல் திருச்சி மாவட்டத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவராகி ...

ஊராளி கவுண்டர்களுக்கும் கொங்கு வெள்ளாளருக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

கவுண்டர் என்ற பட்டத்தால் கவுண்டர் என்று பட்டம் கொண்ட கொங்கு வெள்ளாளருக்கும் நமக்கும் தொடர்பு இருப்பதாக நினைத்து கொண்டு கொங்கு வெள்ளாளரான யுவராஜ்,தனியரசு போன்றோரின் படத்தை சமூக வலைத்தளங்களில் நம் சமுதாய இளைஞர்கள் பயன்படுத்துவது தவறு. கவுண்டர் என்பது பட்டமே.