தியாகி.திரு.ப.பொன்னம்பலக் கவுண்டர்.
ஊராளிக்கவுண்டர்களில் மூத்த தலைவர் சுதந்திர போராட்ட தியாகி திரு.பொன்னம்பலக் கவுண்டர் அவர்கள் 1905 ஆம் ஆண்டு கரூர் மாவட்டம் வடசேரி கிராமத்தில் பழனியாண்டி-முத்தம்மாள்
தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
மிகவும் பின் தங்கிய மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் தொழிற்கல்வியை பயிற்றுவிக்கும் பள்ளியை தவிர வேறெதுவும் இல்லை.பழனியாண்டி கவுண்டர் வேறு பள்ளியில் தன் மகனை சேர்க்க விருப்பமில்லாமல் தானே தனது சொந்த இடத்தில் , சொந்த செலவில் பள்ளியை தொடங்கி மகனுக்கு தொடக்க கல்வியை கொடுத்தார் .
பொன்னம்பலம் தொடக்க கல்வியை முடித்து கல்லூரி படிப்பை தொடங்கிய காலத்தில் வைத்தியநாதன் மற்றும் சேஷன் ஆகியோரின் நட்பை பெற்றதால் உலகம் மற்றும் இந்திய போராட்டச் செய்திகளை இவர்களின் வாயிலாக அறிந்துகொண்டார் .
இந்திய விடுதலைச் செய்திகளை நவசக்தி மற்றும் சுதந்திர சங்கு போன்ற இதழ்களை வாசித்து தேசபக்தியை வளர்த்துக்கொண்டார் . இச்சூழ்நிலையில் மேலவெளியூரில் பிறந்த ராஜம்மாள் வாழ்க்கை துணைவியானார். இவர்களுக்கு இரு ஆண்குழந்தைகள் பிறந்தனர் .
1923 -ல் திருச்சி மாவட்டத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவராகி , காந்தியடிகள் தொடங்கிய கதர் இயக்கத்தில் இணைந்து திருச்சியில் நடந்த கதர் இயக்கப் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.
காந்தியடிகளும் இராஜகோபாலாச்சாரியாரும் இவரின் சேவையைப் பாராட்டி பல கடிதங்கள் எழுதினர் .1934 -ல் பி.டி.ராஜன் வெற்றிபெற கடுமையாக உழைத்தார் . திருமலை ஈஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாள் போன்ற கோவில்களின் அறங்காவலராக சேவை செய்தார்.
1936 -ல் நடந்த திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் . 1940 -ல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக பெருந்தலைவர் காமராஜர் இருந்த போது பிளவுபட்ட காங்கிரஸின் பி.டி.ராஜன் அணியில் இருந்ததால் தான் வகித்து வந்த பதவியை துறப்பதாக காமராஜருக்கு கடிதம் எழுத , அவர் மறுப்பு தெரிவித்ததோடு , அதே பணியில் தொடர வேண்டுகோள் விடுத்தார்.அவரின் வேண்டுகோளை நிராகரிக்க முடியாமல் அதே பதவியில் தொடர்ந்தார்.
1956 -ல் நடந்த இடைத்தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.உன்னதமான தலைவர் உண்மையான தொண்டர்களை 1976 -ல் கண்ணீர்க்கடலில் ஆழ்த்தி விட்டு மறைந்தார்.
Comments
Post a Comment