கவுண்டர் என்பது பட்டமே.

கவுண்டர் என்பது பட்டமே.

முனைவர் சி.சுப்பிரமணியன்.

" கொங்கு வேளாளர் , காப்பிலியன் , பள்ளி , செம்படவன் , ஊராளி , வேட்டுவன் , தமிழர் , கன்னடர் சிலருக்கு வழங்கப்படும் பட்டப் பெயா " 27 என்று தமிழ்ப்பேரகராதி பொருள் கூறுகிறது . 

கவுண்டர் என்ற சொல் கொங்கு வேளாளர்களை மட்டும் குறிப்பது அல்ல . கவுண்டர் என்ற சொல் ஒரு பட்டப் பெயராகக் கிராமத் தலைவர்களுக்கே வழங்கப்பட்டதாகும் . கவுண்டர் என்ற சொல் காமிண்டர் என்ற சொல்லிலிருந்தே வந்திருக்க வேண்டும் . கா = காவல் தொழில் . மிண்டன் = வலிமையுடையவன் . உரைக்காக்கும் வலிமையடையவன் என்பது இதன் பொருளாகும் . வடமொழியில் ' கா ' என்றால் கிராமம் என்றும் மிண்டன் என்றால் வலிமை மிக்க தலைவன் என்றும் பொருள்படும் . வடமொழிப்படி பொருள் கொண்டாலும் கிராமத்தில் வலிமை மிக்க தலைவன் என்ற பொருளே பெறப்படும் . 

காமிண்டன் என்ற சொல் கி.பி .13 ஆம் நூற்றாண்டிலிருந்து தான் கொங்குநாட்டில் பயின்று வருகிறது என்பதைத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் பதிவு அலுவலகம் , கோயமுத்தூரிலுள்ள பெருந்தலையூர் , சேவூர்க்கல்வெட்டுக்கள் வழி அறியமுடிகிறது . 

" " இவர்களை அரசனுடைய நிலக்குத்தகைதாரர்களாகக் கூறலாம் . அத்துடன் தம் வீரத்தாலும் , நாட்டுப் பற்றாலும் , இராச 

,விசுவாசத்தாலும் இக்கவுண்டர்கள் அரசனுக்குரியதான தமது தலைமையிலுள்ள கிராமங்களைப் பகைவர்களின் தாக்குதல்கள் நேரும்போது வீரமுடன் தன் உயிரையும் கொடுத்துக்காத்தும் வந்துள்ளனர் . எனவே , கொங்கானி அரசர்களின் முறைப்படி கவுண்டர்களே அரசனின் உயிர்நாடியாக சமநிலையில் கவுண்டர்களை வைத்து அவர்களுக்கு எல்லையற்ற மரியாதையும் கவுரவமும் கொடுத்துப் போற்றி வந்துள்ளான் . 

இவ்வாறு ஏற்பட்டவர்கள்தான் இன்று கோவை மாவட்டத்திலும் , சேலம் தர்மபுரி மாவட்டங்களிலும் மிகப் பொரும்பான்மையினராக வாழும் வேட்டுவ வேளாளக் கவுண்டர்களின் முன்னோர்களாவர் " என்பார் . கூற்று கிராமத்தலைவர்களாகவும் ஊராளிகளாலகவும் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயரே ' கவுண்டர் ' என்பதையும் , கவுண்டர் என்ற சொல் ஒரு தனிச் சாதியைக் குறிப்பிடுவது அல்ல என்பதையும் தெளிவுபடுத்தும்.



Comments

Popular posts from this blog

ஊராளி கவுண்டர்கள் வேட்டை பிரியர்கள்.

ஊராளி கவுண்டர்களுக்கும் கொங்கு வெள்ளாளருக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

தியாகி.திரு.ப.பொன்னம்பலக் கவுண்டர்.