ஊராளி கவுண்டர்கள் வேட்டை பிரியர்கள்.
ஊராளி கவுண்டர்கள் வேட்டை பிரியர்கள். ஒவ்வொரு வருடமும் மஹா சிவராத்திரி அன்று முன்னோர்களுக்கு படையலிட்டு வணங்குவார்கள். மஹா சிவராத்திக்கு அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு வேட்டைக்கு செல்வார்கள். வேட்டைக்கு தலைமை காவேட்டைக்காரன். கா - என்றால் தலைவன் வேட்டைக்காரத்தலைவன் என்று பொருள். வேட்டையின் இறுதி நாள் அன்று: வேட்டையில் முயலை கொல்பவருக்கு அதன் தலை கொடுக்கப்படும்.பின்னர் வேட்டையாடப்பட்ட முயல்களின் கறியை வெட்டி குச்சியில் குத்தி ஊரில் உள்ளவர்களுக்கு வீட்டில் உள்ள ஆண்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குச்சிகள் கொடுக்கப்படும்.
Comments
Post a Comment